Description
1934இல் தொடங்கி 1944ஆம் ஆண்டு அவரது இறப்பு வரைக்கும் கு.ப.ரா. தொடர்ந்து கவிதைகள் எழுதினார். அவற்றைத் தொகுத்துக் ‘கருவளையும் கையும்‘ என்னும் தலைப்பில் நூலாக்கம் செய்ய முயன்றார். அது வெளியாகியிருந்தால் தமிழ் நவீன கவிதையின் முதல் தொகுப்பாக விளங்கியிருக்கும். அவரது ஆசை ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நிறைவேறியுள்ளது. அவரது கவிதைகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுக் கால வரிசைப்படி இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. நவீன கவிதை முன்னோடி ஒருவரின் கவிதைகள் எவ்வகையில் வெளியாக வேண்டுமோ அவ்வகையில் செம்பதிப்பாக இந்நூல் உருவாகியுள்ளது.




Reviews
There are no reviews yet.