Description
1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்போசியஸ் நிறுவனம் ரூ.10,000 முதலீட்டுடன் தொடங்கி, இப்போது ரூ10,000 கோடி வருமானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணமான திரு.நாராயணமூர்த்தியின் வரலாற்றை திரு.என்.சொக்கன் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.இளைய தலைமுறை படித்து உணர வேண்டிய சிறந்த நூல். உழைத்து உயர வேண்டும், இலட்சியம் அடைய வேண்டும் என்ற தேடல் வேட்கை உள்ளவர்களுக்கு வழிகாட்டும் விதமாக நூல் உள்ளது. திரு.நாராயணமூர்த்தியின் அப்பா ஆசிரியர் என்பதால் அவர் சராசரி தந்தையாக மட்டும் இல்லாமல் ஆசிரியரகாவும்,பலவற்றை புகட்டினார். குழுவாக இசைக்கும் சிம்பொனி பற்றி தந்தை விளக்கியதன் விளைவாக, பின்னர் அந்த விதை, கணிப்பொறி உலகில் ஒரு சிறந்த குழு மனிதராக, குழு வேலை என்ற யுத்திக்கு உதவியது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தின் 4 வது இடம் பெற்றதற்காக தந்தை பாராட்டவில்லை. முதல் மூன்று இடங்கள் என்னாச்சு? என்றார்,அடுத்த பொதுத் தேர்தலில் மாநிலத்தில் மூன்றவாதாக வந்தார். ….. அந்த சிறுதுளி தான் பெருவெள்ளமானது.தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்கள் தான் நல்ல தலைவர்களாக முடியும் தயாராக இருக்கிறவர்களுக்குத் தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும், எதற்காகவும், நாம் கொண்டிருக்கும் மதிப்பீடுகளை விட்டுத்தரக்கூடாது தடைகளைக் கூட நம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும் திரு.நாரயணமூர்த்தியின் வெற்றியின் ரகசியத்தை பறைசாற்றும் விதமாக மிகச் சிறப்பாக நல்ல நடையில் எழுதிய நூல் ஆசிரியர் திரு.என்.சொக்கன் பாராட்டுக்கு உரியவர், அவரது உழைப்பை உணர முடிகின்றது.





Reviews
There are no reviews yet.