ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி

370.00

ஹேமா நரசிம்மன்

கருவுறுதல்… இதுதான் எத்தனை இனிமையான சொல், சந்தோஷமான ஒரு உணர்வு! உங்கள் உடலுக்குள்ளே ஒரு புதிய உயிர் மொட்டுவிடுவது அற்புதம் அல்லவா! ஆனால் பலருக்கு கருத்தரித்தவுடனேயே பயம், தயக்கம், கவலை எல்லாமே முடிச்சிட்டுக் கொள்கின்றனவே. தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணும் ஆவலுடன் எதிர்நோக்கும் அற்புதத் தருணம். ஆனாலும் பிற பெண்கள், உறவினர்கள், நண்பர்கள் இவர்களிடமிருந்து பல்வேறு விவரங்களைக் கேட்டு பல பெண்கள் கருவுற்றதுமே பயமும் கவலையும் கொண்டவர்களாகி விடுகின்றனர்.
இப்புத்தகம் கர்ப்ப காலத்தில் நடக்கும் அத்தனை மாற்றங்களையும் விவரித்து, இந்த 21ம் நூற்றாண்டில் உள்ள வசதிகளையும் எடுத்துக் கூறுகிறது. தொழில்நுட்பமும் பரிசோதனை முறைகளும் புதிய உச்சிகளைத் தொட்டுவிட்ட இன்றைய நிலையில் கர்ப்பகாலத்தை தாய்க்கும் சேய்க்கும் மிகவும் பாதுகாப்பானதாக ஆக்க முடியும். அதே சமயம் ஒவ்வொரு கருவுற்ற பெண்ணுக்கும் அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஆகியோரின் அன்பும், புரிதலும், கனிவும், அக்கறையும் ஈடு இணறையற்றவை என்பதையும் நாம் உணரவேண்டும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி”

Your email address will not be published. Required fields are marked *