தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் என்ற இந்த நூல் இலக்கிய வரலாற்று நூல்களில் முற்றிலும் வேறுபட்டதாய் உள்ளது கனியினும் கனிச்சாறு உடலுக்கு உடனடியாகச் சக்தி தருவதைப் போன்று, இந்நூல் இலக்கியச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொடர்ச்சியாகச் சொல்லிச் செல்கிறது சோர்வின்றி நீண்ட நேரம் படிக்க முடிகிறது இந்நூல் இந்திய அரசுப் பணி, தமிழ்நாடு அரசுப்பணி, பேராசிரியர் தகுதித் தேர்வு, கிராம நிர்வாக அதிகாரித் தேர்வு (வி.ஏ.ஓ.), தமிழ் இலக்கிய இளங்கலை முதுகலைத் தேர்வு எழுதுவோருக்கு மிகுதியும் உறுதுணையாக இருக்கிறது – இந்நூலின் ஆசிரியர் முனைவர் தேவி. இரா. இராசேந்திரன் (தேவிரா). இவர் அ.மா. ஜெயின் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராக 24 ஆண்டுகளாகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார். 1000KS.Com இவர் பேராசிரியப் பெருந்தகை சி.பா. (சி.பாலசுப்பிரமணியன்) அவர்களின் கட்டளையை ஏற்றுப் ‘புதுக்கவிதை இலக்கணம்’ இயற்றியதோடு, அவர் பெயர் சொல்லும் மாணாக்கராய் விளங்குகிறார் இப்பொழுது பல கருத்துகளை இணைத்து, திருத்தப்பட்ட – மேம்படுத்தப்பட்ட பதிப்பாய் இப்பதிப்பு வெளிவருகிறது இந்நூலை எங்கள் நந்தினி பதிப்பகத்தின் மூலம் வெளியிட அனுமதி அளித்த நூலாசிரியருக்கு நன்றி நன்முறையில் தட்டச்சு செய்த இராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி நூல்வடிவம் கொடுத்த சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி இந்நூலாசிரியர் அனைவருக்கும் நற்பயன் விளைவிக்கும் நூல் பல இயற்ற நந்தினி பதிப்பகம் மனநிறைவுடன் வாழ்த்துகிறது
Reviews
There are no reviews yet.