பெண்களே உங்களுக்காக

200.00

ஃபஸ்லுர் ரஹ்மான்

‘பெண்களே உங்களுக்காக!’ என்ற தலைப்பை பிரதானப்படுத்தி ‘ஆண்களே : உங்களுக்கும்’ என்று பின்குறிப்பையும் சேர்த்து இந்தப் புத்தகத்தின் தலைப்பாக அமைத்திருக்கிறோம். ஏனெனில், பெண்களைப் பற்றி ஆண்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆண்களைப் பற்றியும் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். யாவற்றுக்கும் மேலாக பெண்கள் தங்களைப் பற்றியே தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஒட்டுமொத்த சமுதாய நலன் கருதி, இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதிலுள்ள ஒவ்வொரு விஷயமும் மருத்துவப் பொக்கிஷங்களாகவும், ஆண், பெண் இருவரைப் பற்றிய உண்மை ஞானங்கள் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. நிச்சயமாக இது எந்த மருத்துவ அறிவுக்கும் இதுவரை புரியாத, தெரியாத மிக அழகான விஷயங்களை, தெளிவான நடையில், ஒவ்வொரு மனிதனின் பொது அறிவையும் வெகுவாக ஈர்க்கக்கூடியதாகக் கொண்டு இருக்கிறது.
ஒரு பெண் குழந்தை பிறந்ததிலிருந்து அது பருவம் அடையும் காலம் வரையில் ஒரு தாய் அக்குழந்தையைப் பற்றி எந்த வகையில் எல்லாம் பாதுகாக்க வேண்டுமோ, எந்த விஷயமும் விடப்படாமல் விளக்கமாக்கப்பட்டிருக்கிறது. பருவம் அடைந்ததிலிருந்து குழந்தைகளை திருமண வயது வரையில் எவ்விதம் பாதுகாக்க வேண்டும்? மருந்துகளையோ, மருத்துவர்களையோ ஏன் நாட வேண்டிய அவசியம் கிடையாது? என்பதை அறிவுறுத்துவதோடு, ஒவ்வொரு தாயையும், தந்தையையும் தத்தம் குழந்தைகளுக்கு அவர்களையே கைதேர்ந்த மருத்துவர்களாக்கக் கூடிய மருத்துவ ஞானங்களை கொண்டதாக இருக்கிறது இந்த நூல்.
பருவமடையக் கூடிய காலகட்டத்தில் எந்தவிதங்களில் பாலுணர்வுகளிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்தே தீரவேண்டும் என்பதையும்; தவறினால் எவ்வளவு கொடிய நோய்களுக்கு தங்கள் குழந்தைகள் வருங்காலத்தில் ஆளாக நேரிடும் என்பதை எச்சரிக்கக் கூடியதாகவும், அதற்கான எளிதான நிவாரணத்தைக் கொண்டும் படைக்கப்பட்டிருக்கிறது இந்த நூல்.
குழந்தைகளின் படிப்பு போன்றவற்றில் எந்த அளவுக்கு குழந்தைகளின் கண்களையும், அவர்களின் மனநலனை மன அழுத்தத்திலிருந்தும் குழந்தை பருவத்திலேயே பாதுகாப்பது; அவர்களுடைய படிப்பில் எவ்விதம் அவர்களை கஷ்டமில்லாமல் ஈடுபடுத்துவது? இரவு 8 மணிக்கு மேல் ஏன் படிப்பில் ஈடுபடுத்தக் கூடாது? இதன் காரணமாக எந்த அளவுக்கு அவர்கள் ஞாபக சக்தி கூடும்? அவர்களுடைய படிப்பின் தரம் கூடும் என்பதையும் பெற்றோர்களுக்கு படிப்பினைகளைக் கொடுக்கக் கூடிய ஆற்றல் மிகுந்தது இந்த நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பெண்களே உங்களுக்காக”

Your email address will not be published. Required fields are marked *