வந்தார்கள்.. வென்றார்கள்!

320.00

மதன்

மதன் என் இனிய நண்பர். அவர் ஒரு தேர்ந்த கார்ட்டூன் சித்திரக்காரர் என்பது நாடறிந்த உண்மை , மதன் ஒரு நல்ல பத்திரிகாசிரியர்… இயல்பாக, திறமையாகத் தமிழில் எழுதக்கூடியவர் என்பது அத்தனை பரவலாகத் தமிழ் அன்பர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை… ‘வந்தார்கள்.. வென்றார்கள்’ வரும்வரை.மதன் இப்போது எழுத்துத்துறைக்கும் வந்துவிட்டார், வென்று விட்டார். முன்பு ஜூனியர் விகடனில் நான் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ எழுதும்போது அங்கங்கே சில பதில்களில் மதனின் கைவண்ணம் புகுவதை நான் சந்தோஷத்துடன் அனுமதித்தேன். அப்போதே எனக்குத் தெரிந்துபோயிற்று – ஒரு நாள் இவர் முழுப் புத்தகம் எழுதி வெல்லப் போகிறார் என்று. என்ன எழுதப் போகிறார் என்பதுதான் சஸ்பென்ஸாக இருந்தது. சரித்திரம் எழுதப் போகிறார் என்று அறிவிப்பு வந்தவுடன் சற்று ஆச்சரியப்பட்டேன். மதனுக்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் உண்டு என்பது எனக்குத் தெரியும். நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பார் என்பதும் தெரியும், மதன் இந்திய சரித்திரத்தை, இத்தனை புத்தகங்களை இவ்வளவு ஆழமாகப் படித்திருக்கிறார் என்பது இன்பமான அதிர்ச்சி அளித்தது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வந்தார்கள்.. வென்றார்கள்!”

Your email address will not be published. Required fields are marked *