Description
பண்டோர்த் தமிழ்நூல்கள் ஆய்வுடன் அயற்சொல் ஆழம் அறுபடும் விதமாக அழகுறத் தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூலின் சிறப்பு என்னவென்றால் இது எளிய முறையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. தயார், நீதி, பட்டா,பதில், மகசூல், வசூல், விதி இவையெல்லாம் தமிழென்று எண்ணுகிறோம். ஆனால் ‘இவை தமிழல்ல’ என்று ஓங்கியுரைத்த அருளி ஐயாவின் குரலை நாம் செவிமடுக்கவில்லை. அவர்தம் முன்னோர் தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற ஆன்றோர் போற்றி வளர்த்த தனித்தமிழ் இயக்கத்தையும் கண்டு கொள்ளவில்லை. மாறாக இன்னும் கூடுதல் ஆர்வத்துடன் வேற்றுமொழியை வளர்த்தெடுக்கிறோம். இந்நிலையை மாற்ற நெல்லை. க. சித்திக் அவர்களின் இந்நூல் மிக்க உதவியாயிருக்கும். பிறமொழிக் கலப்பின்றி பேசவும் எழுதவும் விரும்பும் தமிழார்வலருக்கு இது நல்லதொரு வழிகாட்டி.




Reviews
There are no reviews yet.