Description
ஆரம்பத்தில் ஆந்திரேய் எபீமிச் உற்சாகமாய்த்தான் வேலை செய்தார், தினமும் மதிய உணவு நேரம் வரை நோயாளிகளைப் பரிசோதித்து மருந்து கொடுத்தும், அறுவை சிகிச்சை அளித்தும் வந்தார், தாய்மை மருத்துவம் கூட செய்தார். அவர் அக்கறையும் கவனமும் வாய்ந்தவர், நோய்களை – குறிப்பாய் பெண்கள் அல்லது குழந்தைகளின் நோய்களை – தேர்ந்த முறையில் நிர்ணயம் செய்தார் என்பதாய்ச் சீமாட்டிகள் கூறினார்கள். ஆனால் மாறாத முறையில் நடைபெற்ற தமது வேலை சலிப்புத் தட்டுவதாகவும், தெளிவாகவே சிறிதும் பயன் திறனற்றதாகவும் இருந்ததைக் கண்ணுற்று நாளாவட்டத்தில் அவர் சோர்வடைந்து விட்டார்.
– கதையிலிருந்து…






Reviews
There are no reviews yet.