கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் சாதியினாற் சுட்ட வடு

175.00

Add to Wishlist
Add to Wishlist

Description

நவீன இந்திய இலக்கிய வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்திய வடிவமாகத் தலித் தன்வரலாற்று நூல்களைக் கூறலாம். விளிம்புநிலை வாழ்வு என்பதாக மட்டும் நின்றுவிடாமல் வரலாறு, புனைவு என்பவை குறித்த பார்வையையும் அவை விஸ்தரித்திருக்கின்றன. நீண்டகாலம் கழித்துத் தமிழ் தலித் தன்வரலாற்று வரிசையில் கச்சிதமான வருகையாக திருக்குமரனின் இந்நூல் அமைந்திருக்கிறது.

சாதியமைப்பில் பல்வேறு மாற்றங்கள் நடந்திருக்கும் சமகாலச் சூழலில் அதன் இருப்பு எத்தகைய வடிவங்களில் தங்கிக் கிடக்கிறது என்பதை 2000த்திற்குப் பிறகு வாழ நேர்ந்த தலித் இளைஞர் ஒருவரின் சுய அனுபவத்தின் வழியே நுட்பமாகக் காட்டுகிறது இந்நூல். தலித்துகள்மீது முன்புபோலச் சாதியை எளிதாகப் பிரயோகித்துவிட முடியாத அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் சாதி எவ்வாறு வெவ்வேறு வடிவங்களில் இயங்கத் தொடங்கியிருக்கிறது என்பதையும் இந்நூல் விரித்திருக்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் சாதியினாற் சுட்ட வடு”

Your email address will not be published. Required fields are marked *