Description
பா.சந்துருவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘துயலான்’, ஒரு கவிஞர் உருவாகிக்கொண்டிருக்கிறார் என்பதை நமக்கு முன்னறிவிக்கிறது. “நாங்களே கலைஞர், ஆமைபோல் உணர்ச்சியின் கிணற்றில் அமிழ்வோம், அணிலைப்போல் கொம்பேறி ஒளிக்கனி கடிப்போம், கொம்பையும் கிணற்றையும் பிணைப்போம்” என ந.பிச்சமூர்த்தி சொன்னதைப்போல பா.சந்துரு, கொம்பையும் கிணற்றையும் எல்லாறெல்லாம் பிணைக்க முயல்கிறார் என்பதை இத்தொகுப்பை வாசிக்கிற நீங்கள் உணர முடியும்.
-பிரளயன்
உதிரிப்பூக்கள் என்ற கவிதையில் இயற்கையின் எழிலைப் பாடும் கவிஞர், சுனாமி பற்றியும் கடலே, உயிர்களைத் தின்று விரிந்த குடலே என்று துயர்மிகு நினைவுகளையும் பகிர்ந்திருக்கிறார். மாதக் கடைசி பற்றிய மனிதர்களின் நிலைமையும் நகைச்சுவையுடன் எழுதியுள்ளார் பா.சந்துரு.
கவிதைத் தொகுப்பில் அம்பேத்கர், பாவேந்தர், காமராசர், கலைஞர் போன்ற பெருந்தலைவர்களின் மகத்தான பணிகளையும் நயமிகு வார்த்தைகளின் கவிதைகளை செய்திருக்கிற கவிஞர் பா.சந்துருவுக்கு தமிழ்க் கவிதைப் பரப்பில் சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்று ஒரு மூத்த கவிஞனாக முன்மொழிகிறேன். நாள்தோறும் ஒரு நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துத் தரும் காதல் கவிஞராக மலர வாழ்த்துகிறேன்.
-கோ.வச்ந்தகுமாரன்




Reviews
There are no reviews yet.