Description
பெஜவாடா வில்சனிடம் கண்ட விரிவான நேர்காணல் நூல் இது. இதன் முதல் பகுதி காலச்சுவடு இதழில் (இதழ் எண் 216, டிசம்பர் 2017) வெளியாகி மிகுந்த கவனம் பெற்றது. கையால் மலம் அள்ளும் வேலையை ஒழிப்பதற்காகவும் துப்புரவுப் பணியாளர்களுக்காகவும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருபவர் வில்சன். கையால் மலம் அள்ளும் முறை ஒழிப்பு, துப்புரவுப் பணி ஆகியவை குறித்த பல்வேறு பார்வைகளையும் சட்டப் போராட்டங்களையும் அவர் பேசியுள்ளார். தனது அரசியல், சமூகப் பார்வைகளைப் பேசியுள்ளார். தன் தனிப்பட்ட வாழ்வு குறித்துப் பேசியிருக்கிறார்.
பெருமாள்முருகன்

Reviews
There are no reviews yet.