கொரோனா பெருந்தொற்றின் பரவலைத் தடுப்பதற்காக 2020 ஆம் ஆண்டில் திடீரென்று நடைமுறைப்படுத்தப்பட்ட தேசியப் பொதுமுடக்கத்தால் நாடு முழுவதிலும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளை இழந்து தவித்தனர், உண்ண உணவின்றியும் வசிக்க இடமின்றியும் அல்லாடினர். நிராதரவாக நின்ற அவர்களில் பெரும்பாலானோர், வேறு வழியின்றி, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த தங்களுடைய சொந்த கிராமங்களுக்குத் தங்களுடைய குழந்தை குட்டிகளுடன் நடந்தே பயணப்பட்டனர். அந்த நெடுந்தூரப் பயணம் பலருக்கு அவர்களுடைய அகால மரணத்தில் முடிந்தது. பிழைப்புக்காக பீகாரிலிருந்து புலம் பெயர்ந்திருந்த ரிதேஷ், ஆஷீஷ், ராம் பாபு, சோனு, கிருஷ்ணா, சந்தீப், முகேஷ் ஆகிய ஏழு தொழிலாளர்கள், அதே போன்ற ஒரு பயணத்தைத் தங்களுடைய சைக்கிளில் மேற்கொண்டனர். அந்த 1232 கிலோமீட்டர் நெடுந்தூரப் பயணம் ஏழு நாட்களும் ஏழு இரவுகளும் நீடித்தது. உத்தரப் பிரதேசத்திலுள்ள காசியாபாதில் தொடங்கி, அவர்களுடைய சொந்த ஊரான சகர்ஸாவில் முடிந்த அந்த பயங்கரமான பயணத்தின்போது, அவர்கள் காவலர்களின் லத்திகளையும் கீழ்த்தரமான அவதூறுகளையும் எதிர்கொண்டனர்; கடும் பசியையும், அதீதக் களைப்பையும், உறைய வைத்த பயத்தையும் எதிர்த்துப் போராடினர். அவர்களுடைய இந்த ஒட்டுமொத்தப் பயணத்தை, தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குநர் வினோத் காப்ரி, உடன் சென்று படம் பிடித்தார். கடுமையான சோதனைகளையும் நிலை குலையச் செய்த சூழ்நிலைகளையும் பெரும் துணிச்சலுடன் எதிர்கொண்டு சமாளித்து, இறுதியில் வெற்றி வாகை சூடிய ஏழு சாதாரணத் தொழிலாளர்களின் அசாதாரணமான உண்மைக் கதைதான் ‘1232 கி.மீ.’.
1232 கி.மீ: நெடுந்தூரப் பயணம் | 1232 Kms: The Long Journey Home
Publisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் Author: வினோத் காப்ரி₹350.00
Category: அரசியல் | POLITICS
Tags: 2022, Vinod Kapri, கட்டுரை
Be the first to review “1232 கி.மீ: நெடுந்தூரப் பயணம் | 1232 Kms: The Long Journey Home” Cancel reply
Related products
Sale!
வாழ்க்கை வரலாறு | BIOGRAPHY
கட்டுரை | ARTICLE
₹25.00
அரசியல் | POLITICS
ஸ்டான் சாமி: ஒரு நிறுவனப் படுகொலை – (நெருக்கடி நிலை உலகம்: தொகுதி – 4)
₹100.00
கட்டுரை | ARTICLE
₹420.00
முழுத் தொகுப்பு | FULL COLLECTIONS
₹250.00
Sale!
அரசியல் | POLITICS
நேர்காணல் | INTERVIEW
₹80.00
Sale!
நாவல் | NOVEL
Reviews
There are no reviews yet.