Description
மெய்யென்பது ஒன்றுண்டு என்பதையே மறக்கடிக்கச் செய்வதற்கு ஒரு அரசியல் வழி செயல்படுகிறது. இரண்டும் இரண்டும் நாலுதான் என்கிற ஞாபகம் இருக்கும் வரையில் எவனும் வாயளவில் சொன்னாலும்கூட இரண்டும் இரண்டும் ஐந்து என்று ஏற்றுக்கொள்ளமாட்டான். பழைய ஞாபகம் மறைவதற்குச் செய்யப்படும் முயற்சிகளை ஆர்வெல் இந்நூலில் சற்று பயங்கரமாகவே விவரித்திருக்கிறார். தங்கள் வழிகள் எந்த இடத்தில் தங்களையும் தங்கள் ஜனங்களையும் கொண்டு போய் நிறுத்தும் என்பதை ஆர்வெல் மூலம் அறிந்த இன்றைய அரசியல்வாதிகள் அநேகர் என்றுதான் சொல்ல வேண்டும். –
க. நா. சுப்ரமண்யம்

Reviews
There are no reviews yet.