ஆத்துக்குப் போகணும் (Aathuku Pokanum)

Publisher:
Author:

125.00

காவேரியின் இந்நாவல்பெண்ணின் இடம் எதுவென்ற கேள்வியை மைய மாகக்கொண்டு விரிவடைகிறது. வீடு என்ற அமைப்பில் பெண்ணுக்குள்ள வாய்ப்பையும் உரிமையையும் ஆராய்கிறது.
வீடு, பொதுவாக ஒரு வசிப்பிடம். ஆனால் பெண்ணுக்கு? பெண்தான் வீட்டை அமைக்கிறாள். அது அவளுடைய சௌகரியங்களுக்கல்ல. ஆணுக்கும் குழந்தைகளுக்கும்தான் இடம் தருகிறது. ஏன்? வீட்டின் பௌதிக மதிப்பையும் பெண்தான் உயர்த்துகிறாள். ஆனால், அந்த மதிப்பில் மரபுரிமை கோர அவளுக்கு வழியில்லை. எதனால்? நாம் நமது உடலில் குடியிருப்பது போல வீட்டுக்குள் குடியிருக்கிறோம். எனினும் பெண்ணுக்கு அந்த இருப்பு எட்டாப் பொருள். எப்படி?
நாவலின் மையப் பாத்திரமான காயத்ரி எழுப்பும் இந்த மும்முனைக் கேள்விகளுக்கும் அவள் தாய் மீனாட்சி தனது வழியிலும் அணுகுமுறையிலும் விடை காண்கிறாள். வீடு ஒரு பாதுகாப்பு, ஒரு பாலைவனச் சோலை என்று புரிய வைக்கிறாள்.

Free shipping for orders above Rs.500 within India.
SKU: e3fa783e44d7 Category: