காதல் கடிதம் (kaatal kaTitam)

Author:
Publisher:
Translator:

75.00

வைக்கம் முகம்மது பஷீரின் அச்சில் வெளியான முதல் நாவல்‘காதல் கடிதம்’. 1943 இல் வெளியானது. ஒரு ‘தமாஷான கதை’ என்று எழுதியவரே குறிப்பிட்டாலும் இது வேடிக்கையான கதை மட்டுமல்ல. எழுதப்பட்ட காலத்தின் சமூகப் பழக்கத்தை எள்ளி நகையாடவும் காதலின் சிக்கலைப் பேசவும் காதலர்களின் சாதுரியங்களைப் பேசவும் செய்கிறது. பிற்காலத்தில் பஷீர் எழுதிய படைப்புகளின் ஆதார குணங்கள் இந்தத் தொடக்க கால நாவலிலேயே புலப்படுகின்றன. அநாயாசமாகச் செல்லும் கதையாடல், தனித்துவமான மொழி, கதாபாத்திரச் சித்தரிப்பில் மறைந்திருக்கும் நுட்பம் ஆகிய இயல்புகள் இந்தப் புனைவை முக்கியமானதாக்குகின்றன. எழுதப்பட்டு முக்கால் நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்பும் வாசிப்புக்கு உகந்ததாகவும் காலத்துக்குப் பொருந்தியதாகவும் இந்த நாவல்நிலைபெற்றிருப்பது பஷீரின் மேதைமையால் மட்டுமே. காலம் பஷீரைக் கடந்து செல்லவில்லை. மாறாக பஷீர் காலத்தைத் தாண்டிச் செல்கிறார் என்பதை ‘காதல் கடிதம்’ உறுதிப்படுத்துகிறது.

Free shipping for orders above Rs.500 within India.
SKU: 5b5e90078b9f Category: