சென்றுபோன நாட்கள் (sentrupona naatkal)

Author:
Publisher:
Translator:

125.00

‘கதை சொல்வதில் சமர்த்தர்’ என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் முதுபெரும் பத்திரிகையாளர்
எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு (1886-1935).
பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இவரை நினைவுகூர்வார்கள். 1928இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது ‘சென்றுபோன நாட்கள்’ தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை ஒரு ‘கிளாசிக்’ ஆகும்.
1926-1934இல் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு எழுதிய ‘சென்றுபோன நாட்கள்’ பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது. முதல் முறையாக இப்பொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை – இவை இந்த நூலின் சிறப்புகள்.
பல்லாண்டுக்காலப் படைப்பூக்கம் மிகுந்த ஆராய்ச்சி
யின் விளைவாக இந்நூலைத் தேடிப் பதிப்பித்திருக்கும்
ஆ.இரா. வேங்கடாசலபதி, துப்பறியும் கதை போல் விரியும் ஒரு நீண்ட முன்னுரையினையும் எழுதியுள்ளார்.

Free shipping for orders above Rs.500 within India.